நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம்…!உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்…!டிடிவி தினகரன் அடுத்த நகர்வு ..!
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும்.எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது.மேலும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பேரின் கருத்தை கேட்ட பிறகு அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம். பல தியாகங்களை செய்துவிட்டு 18 பேரும் எங்களுடன் இருக்கிறார்கள்.அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.