#Breaking : வாக்குச்சாவடியின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு! போலீசார் தீவிர விசாரணை!
- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் முதற்கட்டமாக காலை 7 மணி முதல் தொடங்கி 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றது.
- புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருடபட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு பல இடங்களில் நிறைவு பெற்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிப்பட்டியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்கும் நேரம் முடிந்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டன. அதில் உள்ள வாக்குப்பெட்டிகளை அறையின் பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருடியவர்கள் யார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை.பல கட்ட பாதுகாப்பை மீறி நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.