அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதை காலம் முடிவு செய்யும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பழிவாங்கவே ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்.
தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் பணி செய்து வருகின்றனர். அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதை காலம் முடிவு செய்யும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்போது உள்ள இரட்டை தலைமையால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பம் இல்லை என தெரிவித்தார்.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…