தன்னார்வலர்கள் இனி தனிபட்ட முறையில் நிவாரண பொருட்களை வழங்க கூடாது.! அரசு உத்தரவு.!

Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் நிலவுகிறது. பொதுமக்களிடம் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் ல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தன்னார்வாளர்கள் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர். இதனால், பல்வேறு இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் வந்தன.

இதனை அடுத்து, தற்போது அரசு, ‘ இனி தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் நிவாரண பொருட்களை வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் வழங்க விருப்பமானவர்கள் நிதியுதவியை அரசின் நிவாரண உதவி வங்கி கணக்கிற்கோ , பொருளதவியாக கொடுக்க நினைப்பவர்கள் பெரு மாநகராட்சி ஆணையர்களிடமோ அல்லது அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுக்கலாம். ‘ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் ஊரடங்கை மீறியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.’ என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்