கோவை பாஷையில் பேசுமாறு கேட்ட தொண்டர் – தேர்தல் பரப்புரையில் கமல் ஆவேசம்

Default Image

கோவை பாஷையில் பேசுமாறு கேட்ட தொண்டர், தேர்தல் பரப்புரையில் ஆவேசம் அடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கோவை பீளமேட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அங்கிருந்த ஒருவர் அவரை கோவை பாஷையில் பேசுமாறு கேட்ட நிலையில், தான் நடிக்க வரவில்லை என்றும் மக்களின் எதிர்காலத்தை பேச வந்திருக்கிறேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

எனக்கு எந்த சாயம் பூசினாலும் ஒட்டாது, அது காவியா இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி. மக்களிடம் வரி விதிப்பு மற்றும் டாஸ்மாக் ஆகியவைகளை வைத்து மட்டுமே வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிட்டு அரசை லாபகரமாக நடத்த முடியும்.

40 வருடங்களாக மதுபானத்தை பழக்கிவிட்டார்கள். இப்போ அது மனவியாதி, தமிழர்களுக்கு ரத்தத்தில் ஓடுகிறது ஆல்ககால். அதை உடனே நிறுத்திவிட்டால், பல கொலைகள் நடக்கும், குணாதிசியங்கள் மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், முதலில் தமிழகத்தில் உள்ள 5,000 மதுபான கடைகளை குறைத்து, அந்த பகுதிக்கு அருகில் மனோதத்துவ மருத்துவர் இருக்கும் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்