தொகுதி பங்கீடு: அவர்களுக்கு கொடுத்தது எங்களுக்கும் வேணும்., பிடிவாதம் பிடிக்கும் தேமுதிக.,தொடர்ந்து பேசும் அதிமுக.!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து நீடித்து வரும் பேச்சுவார்த்தை, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் தேதி அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தீவிரமாக தொடங்கியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்ததை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் அதிமுக, தேமுதிக தொகுதிப் பங்கீடு குறித்து மீண்டும் 2வது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த பேசுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாமாவிற்கு 23 தொகுதிகள் வழங்கிய நிலையில், தேமுதிகவுக்கு 23 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  20 தொகுதிகள் மட்டும் ஒதுக்கினால் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.

ஆனால், அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தேமுதிக பிடிவாதம் காட்டி வருவதாகவும், அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 14 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 2011ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை வெற்றி பெற்றது.

2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 3வது அணியாக உருவெடுத்த மக்கள் நல கூட்டணிக்கு தேமுதிக தலைமை தாங்கியது. இதில் 104 தொகுதிகளில் வேட்பாளரை களமிறக்கிய தேமுதிக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த தேமுதிக தொடர்ந்து அந்த கூட்டணிலேயே நீடித்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாமகவிற்கு ஒரு மாநிலங்களைவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு அப்போது எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் தேமுதிக சுட்டிகாட்டிக்கிறதாம். இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கான முடிவு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

4 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

6 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

7 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

8 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

8 hours ago