இரண்டு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதியாகும் – எல் முருகன்

Default Image

தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்று பாஜக மாநில எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்றும் இரண்டு நாளில் தொகுதி பங்கீடு இறுதியாகும் எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் தேமுதிக நிலை பற்றி அதிமுகத்தான் முடிவு எடுக்கும் என்றும் முக ஸ்டாலின் சொல்வதை போல் பாஜகவில் ரவுடிகள் பட்டியல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பேசிய எல் முருகன், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் திமுக செய்யாத விஷயத்தை பாஜக இரண்டே வருடத்தில் செய்துள்ளது. ஏழை மக்களுக்கு இலவசமாக கேஸ் கனக்சன் கொடுத்தது பாஜக தான். இதுபோன்று பல சாதனைகள் பாஜக அரசு செய்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன்பின் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். ஆனாலும், இன்னும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை, பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்