திமுக வளர்வதற்க்கு எம்.ஜி.ஆர் மிகப்பெரிய காரணம்.! சசிகலா பேச்சு.!
1953 ஆம் ஆண்டு முதல் பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். எம்ஜிஆர் படம் நிறுவனத்தின் லோகோவின் கூட திமுகவின் கொடி இருக்கும். இதனால், அண்ணாவுக்கு, எம்.ஜி.ஆர் மீது பற்று அதிகம். – வி.கே.சசிகலா பேசினார்.
நேற்று அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டு நிறைவு செய்து, 51ஆம் ஆண்டில் நுழைந்ததை விழாவாக அதிமுகவினர் கொண்டாடினர். நேற்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடினர்.
அடுத்து, சென்னை தி நகர், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார்.
அதே போல, சென்னை ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ படத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார் வி.கே.சசிகலா. அவர் அப்போது பேசுகையில் திமுக வளர்ச்சியில் எம்.ஜி.ஆர் பங்கு என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், ‘ திமுகவுக்கு விளம்பரம் தேடித்தரும் வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1953 ஆம் ஆண்டு முதல் பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். எம்ஜிஆர் படம் நிறுவனத்தின் லோகோவின் கூட திமுகவின் கொடி இருக்கும். தான் சினிமாவில் அணிந்திருந்த உடையில் கூட சிகப்பு கருப்பும் கலர் இல்லாமல் இருக்காது. ‘ என குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ இதனால், அண்ணாவுக்கு, எம்.ஜி.ஆர் மீது பற்று அதிகம். திமுகவை பட்டி தொட்டி எல்லாம் வளர வைத்தவர் எம்ஜிஆர். திமுகவுக்கு பல்வேறு வகையில் விளம்பரம் தேடிக் கொடுத்தவர் எம்ஜிஆர் ‘ என குறிப்பிட்டு பேசினார்.
இறுதியாக, ‘ திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றின் பங்கேற்காமல், உங்கள் முன்னேற்றத்தை நீங்கள் பார்க்க வேண்டும். திமுகவின் கொள்கை ஜாதியை வைத்து, மதத்தை வைத்து அரசியல் காழ்ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.’ என குற்றம் சாட்டினார் வி.கே.சசிகலா.