திமுக அரசு ஓவ்வொரு நாளும் உயிர்களை பலிகொடுத்து வேடிக்கை பார்க்கிறது.! சசிகலா கண்டனம்.!
மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்பவர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. – சசிகலா கருத்து.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் ஆங்காகே தேங்கி வருகிறது. இந்த மழைநீரை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கங்கே மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாங்காடு பாலண்டிஸ்வர் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 42வயதான லட்சுமிபதி என்பவர் இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே செல்கையில், அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சசிகலா தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்பவர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.’ என குறிப்பிட்டுளளார்.
மேலும், ‘ திமுக அரசு ஒவ்வொரு நாளும் இவ்வாறு உயிர்களை பலிகொடுத்து வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த ஆட்சியாளர்கள் தங்களது அலட்சியப் போக்கை உடனே கைவிட்டு, அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதை தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.’ என தனது கண்டனத்தை சசிகலா பதிவிட்டுள்ளார்.