பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.கே.சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா,கடந்த ஆண்டு விடுதலை பெற்று வெளியே வந்தார்.இதனிடையே சிறையில் இருந்தபோது தனக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்,சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து,இந்த வழக்கில் டாக்டர் அனிதா,அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார்,அதிகாரிகள் கஜராஜ் மாகனூர்,சுரேஷ் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில்,கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவுள்ளனர்.
அந்த வகையில்,சசிகலா மற்றும் இளவரசியும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…