அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மணிமண்டபத்துக்கு வழங்கிய விசிக

இன்று அண்ணல் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இனி அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என நேற்றே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைப்பதற்கு அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025