விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.. கமல்..!

Default Image

விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என கமல் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், சமூகவலைத்தளங்கள் மூலம்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில்  நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்