விவேகானந்தர் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பார்: பிரதமர் மோடி.!

Default Image

விவேகானந்தரின் லட்சியப்பாதையில் இந்தியா முன்னேறுவதை அவர் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளை துவங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை–கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் கொள்கை தத்துவம் தான் தனது அரசாங்கத்தின் தத்துவம் என் கூறினார்.

மேலும், அவர் கூறும்போது சமத்துவம் இருக்கும்போது தான் சமுதாயம் முன்னேறுகிறது, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றிருந்த சலுகைகள், முன்னேற்றத்தின் பலன்கள் இப்போது அனைவருக்கும் கிடைக்கின்றன என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தருக்கு இந்தியாவைப் பற்றிய ஒரு மகத்தான வருங்காலப்பார்வை இருந்தது. இன்று, விவேகானந்தரின் இலட்சியத்தை நிறைவேற்ற, இந்தியா உழைப்பதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா முன்னேறி வருகிறது, ஸ்டார்ட்அப் தொழில், விளையாட்டுகளில், ஆயுதப்படைகளில், உயர்கல்விகளில், பெண்கள் தடைகளை உடைத்து புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்