அப்துல்கலாம் நினைவிடத்துக்கு செல்வது ஒவ்வொரு தேசபக்தருக்கும் இருக்கும் கடமை- அமித்ஷா தமிழில் ட்வீட்.!
முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நினைவிடத்துக்கு செல்வது ஒவ்வொரு தேசபக்தரின் கடமை என அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை தொடங்கிவைத்தார். இதையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுவிட்டு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடத்திற்குச் செல்வது ஒவ்வொரு தேசபக்தரின் கனவாகும். மகத்துவம் என்பது ஒருவரின் உடைமையில் இல்லை, தேசத்திற்கு ஆற்றும் பங்களிப்பில் உள்ளது என்ற எண்ணத்தின் சான்றாக வாழ்ந்த மாபெரும் அறிஞர், விஞ்ஞானி, நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்… pic.twitter.com/dl36X2VIJH
— Amit Shah (@AmitShah) July 29, 2023
அதன்பிறகு அமித்ஷா தனது ட்விட்டரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு செல்வது ஒவ்வொரு தேசபக்தரின் கடமை. மகத்துவம் என்பது ஒருவர் தேசத்துக்கு ஆற்றும் பங்களிப்பில் இருக்கிறது என்பதற்கு சான்றாக வாழ்ந்த மாபெரும் அறிஞர், விஞ்ஞானி, நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.