குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் தமிழக பயணம்… பட்டமளிப்பு விழா முதல் டெல்லி புறப்பாடு வரை.!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா ஆகியர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது போல சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 9:00 மணிக்கு சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு.! கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வக்கீல்.?
அதன் பிறகு இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணி அளவில் கலந்து கொள்ள உள்ளார். அங்கு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்த விழா முடிந்து நண்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி செல்ல உள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.