சற்று நேரத்தில் அறிவுப்பு??இபிஎஸ்-ஒபிஎஸ் தலைமை அலுவகம் வருகை

Published by
kavitha
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு  சில மாதங்களே எஞ்சி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்ற விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது.
இவ்விவகாரத்திற்கு  இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் வெடித்தாக தகவல் வெளியானது.அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.,7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
அதன்படி,  இன்று முதல்வர் வேட்பாளரை அறிவிக்க  அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக நேற்று காலை முதல் சுமார் 18 மணி நேரம்  மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்,  ஒபிஎஸ் – இபிஎஸ் உடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினர்.
இந்த ஆலோசனை அதிகாலை 3 மணி வரை இந்த ஆலோசனை நீடித்த நிலையில்
இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் குறித்தும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் வருகை தர தொடங்கி உள்ளனர்.இந்நிலையில்  சென்னையிலுள்ள தனது இல்லத்தில் இருந்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் புறப்பட்ட  நிலையில் சென்னையிலுள்ள  இல்லத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக அலுவலகம்  நோக்கி புறப்பட்டார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமை அலுவலகம் இருவரும் தலைமை அலுவகம் வந்தடைந்தனர்.இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவி அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்கின்றனர்.
Published by
kavitha

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

23 minutes ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

42 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

56 minutes ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

1 hour ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

2 hours ago