நடிகர் விஷால் இயக்கத்தில் அவரே நடிக்கும் துப்பறிவாளன் 2 திரைபடத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும் படத்திற்க்கான படப்பிடிப்பு லண்டனில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென இயக்குனர் மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இயக்குனர் மிஸ்கின் படத்திலிருந்து விலகினார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில் மிஸ்கின் விலகினார். அடுத்ததாக நடிகர் விஷால் இந்தப் திரைப்படத்தை இயக்குவார் என அறிவித்தார். அதன் பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவில்லை.இந்த நிலையில் தற்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு லண்டனில் படத்தின் படப்பிடிப்பு நடத்தலாம் என விஷால் முடிவெடுத்து படப்பிடிப்பிற்காக தயாராகி இருந்தார். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதன் காரணத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது மட்டுமில்லாமல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்டதால் அங்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…