சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்க தலைவர் விஷால் மீது குற்றம் சாட்டினர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வந்தார்.விஷால் மீது குற்றச்சாட்டுகள் கூறி, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் பூட்டு போடப்பட்ட நிலையில், பூட்டை அகற்ற விஷால் முயற்சி செய்தார் .
இதனால் அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்தரப்பினரால் போடப்பட்ட பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர்.
இதன் பின் விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக கூடுதல் மற்றும் பிரச்சினைக்குரிய சொத்துக்கள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைத்தார்.வட்டாட்சியர் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்தார்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து விஷால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.மனுவாக தாக்கல் செய்தால் மதியம் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் விஷால் கைது செய்யப்பட்டதற்கும் உயர்நீதிமன்றம் கண்டன தெரிவித்துள்ளது. விஷால் தொடர்ந்த வழக்கில் சீலை அகற்ற வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…