ரஜினி ,கமல் குறித்து விஷால் அதிரடி கருத்து !
நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கூறியதில் , காவிரி பிரச்னையில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திண்டுகல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டால் நல்லது எனவும், அதனை கர்நாடக அரசு மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றார்.
காவிரி நதி நீர் பிரச்னையில் நடிகர்கள் ரஜினி, கமல் தமிழகத்திற்காக குரல் கொடுத்தால் நல்லது என்றும் விஷால் கூறினார். ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.