#BREAKING: விருதுநகர் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடிடம் ஒப்படைப்பு..!

விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார்.
ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது, மாடசாமி என்பவரிடம் உதவுமாறு அந்த பெண் கேட்ட நிலையில், அந்த நபரும் அவரை பாலியல் கொடுமை செய்துள்ளார்.இந்நிலையில், ஹரிஹரன் உட்பட 8 பேர் மீது அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். நேற்று சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என அறிவித்தார். இந்நிலையில், விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை அதிகாரி டிஎஸ்பி அர்ச்சனா வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி எஸ்பி வினோதினியிடம் வழங்கினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025