விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்

Published by
லீனா

விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது  என டிடிவி தினகரன் ட்வீட். 

பாலியல் தொந்தரவு 

விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளார்.

போலீசில் புகார் 

இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்த நிலையில் திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய தண்டனை எடுக்கப்பட வேண்டுமென எம்.பி கனிமொழி, கமலஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிடிவி தினகரன் ட்வீட்

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் மகளிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆளுங்கட்சியினர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பதால் விசாரணையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது.

வேறு யாராவது இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விருதுநகர் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

3 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

7 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

8 hours ago