Srivilliputhur [the indian express]
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன் பட்டியில் ‘ஜெயந்தி பட்டாசு’ என்ற பெயரில் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில் சுமார் 60-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை பணிக்காக வந்த ஊழியர்கள், வழக்கம்போல் அவர்களின் வேலைகளை பார்த்து வந்துள்ளனர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான இராசயன மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் இருந்து, ஊழியர்கள் அவற்றை இறக்கி வைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
அந்த நேரம் அதில் இருந்த இரசாயன மூலப்பொருள் ஒன்றில் [பரேட் மருந்து தயாரிக்கும் பொடி எனக் கூறப்படுகிறது] திடீரென உராய்வு ஏற்பட்டு வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் இருந்து பரவிய தீ பொரிகள் ஆங்காங்கே சிதறி, பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணரிய ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கு இடையே இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணியாற்றிய ஊழியர்களான புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், மற்றும் அவசர ஊர்தி வாகனங்கள் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தீயை கட்டுக்குள்கொண்டுவர போராடியுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்வம் அறிந்து அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதி செய்து இதுபோன்ற அபாயகரமான பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…