விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை – சிபிசிஐடி விசாரணை நிறைவு!
விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நிறைவு பெற்றது.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 6 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை நடத்தினர். வன்கொடுமை சம்பவம் குறித்து, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இளம்பெண் பலாத்கார வழக்கு ஆவணங்கள் நேற்று சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8 பேரில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.