விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது,கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தது.
விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில்,சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தொட்டியங்குளம் பகுதிக்கு வந்த நேரத்தில்,அந்த பகுதியில் தாழ்வாக இருந்த மின் இணைப்பு கம்பி அறுந்து ரயில் மீது விழுந்தது.
உடனே ரயிலை இயக்கியவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் ரயில் தடம் புரல்வது தவிர்க்கப்பட்டது.குறிப்பாக,மின் இணைப்பு கொடுக்கப்படாததால் சென்னை – செங்கோட்டை ரயிலில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,எஞ்சின் பகுதியை மின் கம்பி சுற்றியதால் அந்த மின் கம்பியை அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து,சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரயில் தாமதமாக சற்று முன்னர் புறப்பட்டு செங்கோட்டை நோக்கி சென்றுள்ளது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…