+2 பள்ளி தேர்ச்சி விகித அடிப்படையில் முதலிலத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் +2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பதிவெண், பிறந்த தேதி கொண்டு மாணவ மாணவியர்கள் தங்கள் மதிப்பெண்களை அறிந்து வருகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதில் மாவட்ட வாரியாக +2 தேர்ச்சி விகிதம் அடிப்படையில், விருதுநகர் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதத்துடனும், பெரம்பலூர் 97.59 சதவீதத்துடன் 3ஆம் இடத்திலும் உள்ளது.
நான்காம் இடத்தில் கோவை 97.57 சதேவீதத்துடனும், தூத்துக்குடி மாவட்டம் 97.37 சதவீதத்துடன் 5ஆம் இடத்திலும் உள்ளது. 6ஆம் இடத்தில், சிவகங்கை 97.26 சதவீதத்துடனும், அடுத்தடுத்த இடங்களில் கன்னியகுமரி 97.05 சதவீததுடன் ஆட்டுத்த இடத்திலும், தலைநகர் சென்னை 94.14 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை 87.30 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது.
அரசு பள்ளியில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் அமைந்துள்ளது. அங்கு, அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.45 சதவீதமாகும். பள்ளிகள் வாரியாக, பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 96.04 சதவீதம் எனவும், இருபாலர் பள்ளியானது 94.39 சதவீத தேர்ச்சி எனவும், ஆண்கள் பள்ளிகள் 87.79 சதவீத தேர்ச்சி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதமானது 89.80 சதவீதம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…