விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு வந்தது. நேற்றைய தினம் குவாரிக்கு கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த வெடி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே, சேதுராமன் என்பவர் நேற்று கைதான நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கல்குவாரியால் பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில், மீதமுள்ள வெடிமருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தீயணைப்புத்துறை நேற்றைய தினம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…