விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

bombblast

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் நேற்று (மே 1) நடந்த வெடிவிபத்தில், குருசாமி, கந்தசாமி, துரை ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இந்த வெடி விபத்தில் காயமடைந்தனர். பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அருகில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பயங்கர வெடி விபத்து தொடர்பாக இதுவரை, சேது ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக, அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் அளித்த புகாரின் பெயரில், FIR பதியப்பட்டது. விருதுநகர் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பல்வேறு அதிர்சசி தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது, டெட்டனேட்டர் எனும் வெடிமருந்து இருந்த வேன் மற்றும் நைட்ரஜன் இருந்த வேன் என இரு வெடிமருந்து இருந்த வாகனங்களும் அருகருகே வைத்து, அதில் இருந்து வெடிபொருட்களை தொழிலாளர்கள் இறக்கிய போது இந்த கோர விபத்து நேர்ந்ததாக FIRஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்துகளைக் கையாண்டதும் விசாரணையில் தெரிய வந்துளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்து தொடர்பாக மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் , பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பொருட்களை கையாளுதல், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வெடிவிபத்தில் சிதறிய உடல்களை சுமார் 2 மணிநேரமாக மீட்புப்படையினர் தேடி பின்னர், அதனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு இன்று அதிகாலை உறவினர்களிடம் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்