ஐசிசி டி20 தரவரிசையில் 15 வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி!
ஆசியக் கோப்பையை போட்டிக்கு பின் ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி 15-வது இடத்திற்கு முன்னேறினார்.
சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 14 இடங்கள் கடந்து முன்னேறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகள் முடிவடைந்ததையடுத்து, ஐசிசி சமீபத்திய டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இது விராட் கோலிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபார சதம் விளாசிய விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பினார். கோலியின் இந்த சதத்தால் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கோலி 14 இடங்கள் கடந்து முன்னேறியுள்ளார். தற்போது விராட் கோலி 599 ரேட்டிங் பெற்று ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 606 ரேட்டிங் பெற்று 14-வது இடத்தில் உள்ளார். சூர்யாகுமார் யாதவ் 755 ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே மூன்று வடிவங்களின் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், இன்னும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டாலும், பாபர் அசாம் சற்று பின்தங்கியுள்ளார். தற்போது 792 ரேட்டிங்-யுடன் தென்னாப்பிரிக்க வீரர் ஆடம் மார்க்ரம் இரண்டாவது இடத்திலும், பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும், டேவிட் மலான் ஐந்தாவது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் ஆறாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Big rewards for star performers from the #AsiaCup2022 in the latest update of the @MRFWorldwide ICC Men’s T20I Player Rankings ????
Details ⬇️ https://t.co/B8UAn4Otze
— ICC (@ICC) September 14, 2022