வைரல் வீடியோ :ஊராட்சி மன்றத்தில் “தமிழ் தாய் வாழ்த்து பாடலை”தவறாக ஊராட்சி மன்ற உறுப்பினர் .!
- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது
- அவர் பாடிய தமிழ்தாய் வாழ்த்து பாடலில் “சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என பாடுவதற்கு பதிலாக “சீராலும் கடலமென திகபறந்த கண்ட நபில்” என பாடி உள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் , மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி அடுத்த மறுநாள் மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதவியேற்பு விழா தற்போது அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது வருகிறது.
குமரியில் தவறாக பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடல் pic.twitter.com/BQzbYG6cYQ
— Dinasuvadu (@Dinasuvadu) January 7, 2020
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோருக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தின் போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாடினர்.
அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானவேல்என்பவர் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாக மைக்கில் பாடினார்.இதனால் அங்கு இருந்தவர்கள் உடனடியாக பாடலை நிறுத்துமாறு அவரிடம் கூறினர்.அவர் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் பாடிய தமிழ்தாய் வாழ்த்து பாடலில் “சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என பாடுவதற்கு பதிலாக “சீராலும் கடலமென திகபறந்த கண்ட நபில்” என பாடி உள்ளார்.