மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில், இரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார்.
மதுரை : மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவர் சங்க கட்டிடம் அருகே, ஒரு பெண் நேற்றிரவு நடந்து சென்றபோது, அந்த பெண்ணை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடி குருவி விஜய் மற்றும் கார்த்திக் ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அந்த ரவுடிகள் கட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போலீசார் தங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து குருவி விஜயை காலில் சுட்டுள்ளனர். போலீசார் சுட்டதில் கீழே விழுந்த அவர் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…