சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு! 347 வழக்குகளை பதிவு செய்த காவல் துறை!
தீபாவளி நாளன்று விதிகளை மீறி பட்டாசு வெடித்ததால் மொத்தமாக 347 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாகவே கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்துள்ளதால் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை தான் கொண்டாட்டமாகவே இருக்கும். குறிப்பாக மக்கள் தங்களது மகிழ்ச்சியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருவார்கள். இருப்பினும், காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்குக் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் தான் வெடி வெடிக்க வேண்டுமென முன்னதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதாவது, காலை காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால், சென்னையில் இந்த விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாது, பட்டாசுகளைக் கொளுத்தித் தூக்கி எறிந்து விளையாடக் கூடாது.
மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாகப் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என பல்வேறு விதிகள் கட்டுப்பாடுகளைக் காவல்துறை விதித்திருந்தது. இதற்கென, இந்த விதியை மீறி ஏரேனும் பட்டாசு வெடிக்கிறார்களா எனக் கண்காணிப்பதற்காகவே ஒரு சிறப்புத் தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னையில் அப்படி கன்னக்கணிக்க பட்டதில், விதிகளை மீறி பட்டாசுகள் வெடித்தன காரணமாக 347 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகச் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.