சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் 5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை 2 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 கோடி செலவில் அமைக்க உள்ளது. இந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைவதால் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், நாளை நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
தென் மாவட்டங்களுக்கு இதே போன்று தொடர்ந்து முதலீடுகள் ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இந்த உலகம் முதலீட்டா மாநாட்டில் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு முதலீட்டில் ஈர்ப்பதற்கான நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…