விநாயக சதுர்த்தி : அசம்பாவிதங்களை தடுக்க தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு.!
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில இந்து அமைப்புகள் அரசின் உத்தரவை மீறி சிலைகளை வைக்க போவதாகவும், ஊர்வலம் நடத்த போவதாகவும் கூறியதை அடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் அரசு உத்தரவை மீறி சிலைகளை வைத்து வழிபாடு செய்யும் அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிலைகளை அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 இடங்களில் வழக்கமாக விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். எனவே அந்த பகுதிகளில் காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், சென்னையில் உள்ள பல பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 15 ஆயிரம் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில் தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் போலீசார் அணி வகுப்பு நடத்தினர் .