தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர்சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல பல்வேறு அமைப்பினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடையே ஊர்வலம் செல்வது தொடர்பாக திடீர் மோதல் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.மோதல் காரணமாக மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.
DINASUVADU