Vinayagar Chaturthi: ஓம் மகா கணபதியே போற்றி.! விநாயகர் சதுர்த்திக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Annamalai

இந்தியா முழுவதும் இந்துக்களின் முக்கியமான விழாவான விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பலரம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது எக்ஸ் பக்கத்தில், “முழுமுதற் கடவுள், மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும் பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

“ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன். ஓம் மகா கணபதியே போற்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்