SETC: விநாயகர் சதுர்த்தி – இன்று 650, நாளை 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இன்றும் நாளையும் மொத்த 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, இன்று (செப்.15) சென்னையிலிருந்து தமிழ கத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடு தலாக 650 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், நாளை (செப்.16) 200 பேருந்துகளும், மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.