விழுப்புரம் – கள்ளச்சாராயம் உயிரிழப்பு 11-ஆக உயர்வு!

womendeath

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு.

விழுப்புரம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததாக கூறி அறிகுறிகளுடன் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வயிறு வலி, மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயன் (வயது 66) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்