விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்! சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயார்நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.
இந்நிலையில், ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர், சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயார்நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதால், தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என இந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.