ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
2023இல் பூட்டப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி அம்மன் கோயில் இன்று (ஏப்ரல் 17) திறக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் உள்ளே வந்து சாமி தரிசனம் செய்ய கூடாது என ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 2023-ல் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பிறகு, திரௌபதி அம்மன் கோயிலுக்குள் யாரும் செல்லக் கூடாது என திரௌபதி அம்மன் கோயில் மூடப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பின் படி பட்டியியலின மக்கள் கோயில் உள்ளே சென்று வழிபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதில் பலர் பிறந்தது முதல் கோயில் உள்ளே சென்றது இல்லை எனக் கூறி, தற்போது தான் முதன் முதலாக சென்றதாக உணர்ச்சி பொங்க கூறினர். நீதிமன்ற உத்தரவுப்படி இன்று 1 மணி நேரம் வரை மட்டுமே கோயில் நடை திறந்து இருந்தது. தினமும் ஒரு மணிநேரம் மட்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் கோயில் நடை மூடப்பட்டது. கோயிலை சுற்றி சிசிடிவி கேமிரா அமைத்து போலீசார் கண்காணிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 மாதங்கள் கழித்து திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்திருந்தாலும், மாற்று தரப்பினர் கோயில் வெளியே பட்டியலின மக்கள் கோயில் உள்ளே சென்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025