விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்பு 14-ஆக உயர்வு!
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயன், மலர்விழி, சுரேஷ், சங்கர், கேசவவேலு, விஜயன், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், ராஜமூர்த்தி, சங்கர், மண்ணாங்கட்டி, ஆபிரகாம் மற்றும் சரத்குமார் ஆகியோரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்க்குப்பதில் கள்ளச்சாராயம் குடித்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4943 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தகவல் தெரிவித்திருந்தது.