விழுப்புரத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி !
விழுப்புரத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நேற்று (மே9) மட்டும் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 4 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று மட்டும் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரத்தில் 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.