விழுப்புரம் : கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு…!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழகத்தின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் கழக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை,பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.