மேலும் ஒருவர் பலி.! விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மீண்டும் உயர்வு.!
விழுப்புரம் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகமாகுமோ என்ற பதற்றம் அப்பகுதியில் உருவாகியுள்ளது. இருந்தும் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.