ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க கிராமமக்கள் கடும் எதிர்ப்பு.!

Default Image
  • பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
  • விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும்.

கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமி  என்பவரும் , பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று குமளங்குளத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பதவிக்கான பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டார்கள். இதையெடுத்து நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பதிவியேற்பு விழாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்கு இருந்து கலைந்து செல்லுங்கள் என போலீசார் கூறினர்.ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லையேன்றால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை , ரே‌ஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என கூறினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்