பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்! எதற்காக தெரியுமா?
பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமம் எப்போதுமே பசுமையாக காணப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த, இந்த கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்குவது வழக்கம்.
பெரம்பூரில் உள்ள கிராமங்களில் உள்ள மரங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வேப்பமரம், வேங்கை மரம், ஆலமரம் மாமரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், இங்கு கூடு கட்டி வாழும் பறவைகள் மார்ச் மாதத்தில், தனது சொந்த ஊருக்கு திரும்பி விடும்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று இந்த மக்கள், பறவைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். இந்த பகுதியில், வெளிநாட்டு பறவைகள் மட்டுமல்லாது, பழந்திண்ணி வௌவால்களும் அதிகமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள், குழு அமைத்து, பறவைகளை பாதுகாக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.