13 மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து..!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால், மகாத்மா காந்தி பிறந்த நாளான நாளை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.