கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டது. இதன்படி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராம சபை பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது நல்ல காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளாகவோ நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதுடன் 6 அடி இடைபெளி விட்டு அமர வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என்று தெரிவித்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…