தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், ஏப்ரல் 24-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படும். அப்பொழுது இந்த கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்தும், உறுதிமொழி எடுத்திடவும், சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்திடுமாறும், கூட்டம் குறித்த விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமசபை கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…