தடையை மீறி நடத்தப்பட்ட கிராமசபை – திமுக எம்.பி கனிமொழி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு!
தடையை மீறி நடத்தப்பட்ட கிராமசபை நடத்தியதால், திமுக எம்.பி கனிமொழி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்க இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. எந்த இடங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாவிட்டாலும், திமுக சார்பில் அனைத்து ஊராட்சி மக்களையும் சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் கிராம சபை கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கனிமொழி மற்றும் அமைச்சர்களுடன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தடையை மீறி திமுக சார்பில் கிராம சபை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரால் நடத்தப்பட்டுள்ளது. இதனால், தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்திய கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.