காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை விஜயதரணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த சனிக்கிழமை காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விஜயதரணி மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம்செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு, சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை தலைவருக்கும், சட்டப்பேரவை முதன்மை செயலாளருக்கும் விஜயதாரணி அனுப்பி இருந்தார். நேற்று நெல்லையில் பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடும் என்றே தெரிகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…